Monday, 22 February 2016

உலகின் முதலாவது வயர்லெஸ் ஸ்கானர் மவுஸ் உருவாக்கம்:-


                      ஹொங்ஹொங்கினை தளமாகக் கொண்டு இயங்குதம் Design to Innovation (DTOI) நிறுவனம் உலகின் முதலாவது வயர்லெஸ் ஸ்கானர் மவுஸினை உருவாக்கியுள்ளது.
சாதாரண ஒப்டிக்கல் மவுஸ்களை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Zcan மவுஸ் ஆனது புகைப்படங்கள், டெக்ஸ்ட் ஆகியவற்றினை ஸ்கான் செய்யும் வசதியை பயனர்களுக்கு வழங்குகின்றது.
2.4 GHz மீடிறனில் Wi-Fi தொழில்நுட்பத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் Zcan மவுஸினை Windows 7, Windows 8, Mac OS X 10.6 ஆகியவற்றிலும் மூன்றாம் தலைமுறைக்குரிய iPad, இரண்டாம் தலைமுறைக்குரிய iPad Mini மற்றும் iPhone 5/5S ஆகியவற்றிலும் பயன்படுத்த முடியும்.
இதன் மூலம்
Excel, Word, PDF, TXT JPEG, TIFF, PNG அல்லது BMP கோப்புக்களை ஸ்கான் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.    
                                                                                                                              

பென்டிரைவில் நீண்டநேரம் தரவுகளை பரிமாற்றம் செய்வதை தடுக்கும் வழிகள்!


                பென்டிரைவ் என்பது கணினி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு REMOVABLE DEVICE
ஆகும்.
இத்தகைய பென்டிரைவ்கள் (pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும்.
அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி? உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
* உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E) கொடுத்து MY COMPUTER செல்லவும்.
* அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்துறி properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
* தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத் தேர்ந்தெடுக்கவும்.
* பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.
* அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.
* அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.
             இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். 
            மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும்.
          இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்.

கெர்னல் (kernel)

கேள்வி:
              கம்ப்யூட்டர் இயங்குவதில் கெர்னல் (kernel) என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இப்போது வரும் வைரஸ் பிரச்னைகளிலும் இது குறித்து எழுதப்படுகிறது. இது எதனைக் குறிக்கிறது என்று விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

பதில்:
              பலவகையான கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் கெர்னல் என்பது மிக மிக முக்கியமான ஒரு உறுப்பாகும். இது ஒரு கரு போன்றது. ஹார்ட்வேர் அளவில் நடக்கும் டேட்டா கையாளுதல் செயல்பாட்டிற்கும், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பின் செயல்பாட்டிற்கும் இடையே ஒரு பாலமாக, இது இயங்கும். சிஸ்டத்தின் திறன்களை, ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் செயல்பாடு களுக்கெனத் திறமையாக நிர்வாகம் செய்வது கெர்னல் ஒன்றின் பொறுப்பு. சிஸ்டத்தின் திறன் என்பது சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட், ராம் நினைவகம், கீ போர்டு, மானிட்டர்,டிஸ்க் ட்ரைவ் மற்றும் பிரிண்டர் போன்ற உள்ளீடு, வெளியீடு சாதனங்கள் ஆகியவை ஆகும். இவற்றிலிருந்து கிடைக்கும் வேண்டுகோள் கட்டளைகளை, அவற்றின் நிலை அறிந்து, பெற்று இயக்குவது இந்த கெர்னலின் பொறுப்பு.
விண்டோஸ் இயக்கத்தில் இது எப்படி இடம் பெற்றுள்ளது என்றும் பார்க்கலாம். 1985ல், அப்போதிருந்த எம்.எஸ். டாஸ் இயக்கத்தின் ஆட் ஆன் தொகுப்பாகத்தான் விண்டோஸ் வெளியானது. விண்டோஸ் தன் இயக்கத்திற்கு, டாஸ் இயக்கத்தின் மீது சார்ந்து இருந்ததால், விண்டோஸ் 95 இயக்கத்திற்கு முன் வந்தவை, ஆப்பரேட்டிங் சுற்றுவட்டம் (என்விரான்மென்ட்) (கவனிக்க: ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லை) என அழைக்கப்பட்டது. இப்படியே விண்டோஸ் இயக்கம் 1980 முதல் 2000 வரை இருந்தது. பின்னர் படிப்படியாக கெர்னலிலேயே பயன்பாட்டு செயல்பாடுகளும் தரப்பட்டு, முழுமையான கெர்னல் இயக்கத்தில் விண்டோஸ் பயனாளர் பயன்பாடு அமைந்தது.
அண்மைக் காலத்தில் இந்த கெர்னல் செயல்பாட்டில், விண்டோஸ் 7 உட்பட, அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் பிழை இருப்பதாக அறியப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் அவற்றைத் தீர்க்கும் பேட்ச் பைல்களைத் தருவதில் ஈடுபட்டுள்ளது.