Monday, 22 February 2016

கெர்னல் (kernel)

கேள்வி:
              கம்ப்யூட்டர் இயங்குவதில் கெர்னல் (kernel) என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இப்போது வரும் வைரஸ் பிரச்னைகளிலும் இது குறித்து எழுதப்படுகிறது. இது எதனைக் குறிக்கிறது என்று விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

பதில்:
              பலவகையான கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் கெர்னல் என்பது மிக மிக முக்கியமான ஒரு உறுப்பாகும். இது ஒரு கரு போன்றது. ஹார்ட்வேர் அளவில் நடக்கும் டேட்டா கையாளுதல் செயல்பாட்டிற்கும், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பின் செயல்பாட்டிற்கும் இடையே ஒரு பாலமாக, இது இயங்கும். சிஸ்டத்தின் திறன்களை, ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் செயல்பாடு களுக்கெனத் திறமையாக நிர்வாகம் செய்வது கெர்னல் ஒன்றின் பொறுப்பு. சிஸ்டத்தின் திறன் என்பது சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட், ராம் நினைவகம், கீ போர்டு, மானிட்டர்,டிஸ்க் ட்ரைவ் மற்றும் பிரிண்டர் போன்ற உள்ளீடு, வெளியீடு சாதனங்கள் ஆகியவை ஆகும். இவற்றிலிருந்து கிடைக்கும் வேண்டுகோள் கட்டளைகளை, அவற்றின் நிலை அறிந்து, பெற்று இயக்குவது இந்த கெர்னலின் பொறுப்பு.
விண்டோஸ் இயக்கத்தில் இது எப்படி இடம் பெற்றுள்ளது என்றும் பார்க்கலாம். 1985ல், அப்போதிருந்த எம்.எஸ். டாஸ் இயக்கத்தின் ஆட் ஆன் தொகுப்பாகத்தான் விண்டோஸ் வெளியானது. விண்டோஸ் தன் இயக்கத்திற்கு, டாஸ் இயக்கத்தின் மீது சார்ந்து இருந்ததால், விண்டோஸ் 95 இயக்கத்திற்கு முன் வந்தவை, ஆப்பரேட்டிங் சுற்றுவட்டம் (என்விரான்மென்ட்) (கவனிக்க: ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லை) என அழைக்கப்பட்டது. இப்படியே விண்டோஸ் இயக்கம் 1980 முதல் 2000 வரை இருந்தது. பின்னர் படிப்படியாக கெர்னலிலேயே பயன்பாட்டு செயல்பாடுகளும் தரப்பட்டு, முழுமையான கெர்னல் இயக்கத்தில் விண்டோஸ் பயனாளர் பயன்பாடு அமைந்தது.
அண்மைக் காலத்தில் இந்த கெர்னல் செயல்பாட்டில், விண்டோஸ் 7 உட்பட, அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் பிழை இருப்பதாக அறியப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் அவற்றைத் தீர்க்கும் பேட்ச் பைல்களைத் தருவதில் ஈடுபட்டுள்ளது.
                                                                                                                               

No comments:

Post a Comment