Friday, 17 July 2015

கண்ணை திறந்து மூடும் உலகின் உறங்கும் அழகி மம்மி வீடியோ....!!!!

கண்ணை திறந்து மூடும் உலகின் உறங்கும் அழகி மம்மி வீடியோ
இத்தாலியின் தென் பகுதியில் உள்ள சிசிலியின் பல்மெர்கோ நகரில் உள்ள ஒரு மியூசியத்தில்  90 வருடங்களுக்கு முன் நிமோனியாவால் இறந்து போன 2 வயது சிறுமி ரோசாலியா லம்போட்டாவின் உடல் ஒன்று பதப்படுத்தபட்டு கண்ணாடி பேழைக்குள் வைக்கபட்டு உள்ளது. உலகின் மிக அழகான மம்மியாக இது கூறபடுகிறது. இதை பார்ப்பதற்கு என்றே சுற்றுலா பயணிகள் வருகின்றனர். உண்மையில் இதை இறந்த உடல் மம்மியாக ஏற்று கொள்ள முடிய வில்லை ஏன என்றால் ஒரு சிறுமி கண்ணாடி பேழைக்குள் உறங்குவது போன்று அழகிய தோற்றத்துடன் உள்ளது.

பலர் இதை உறங்கும் அழகி என்றே அழைக்கின்றனர். இந்த சிறுமி மம்மியின் கண்கள் அடிக்கடி திறந்து மூடுகிறது. ஆழமான தூக்கத்தில் இருந்து ஒருவர் கண்ணை திறப்பது போல் மெதுவாக கண்கள் திறப்பது போல் அது உள்ளது. தன்னை எழுப்ப முயற்சிக்  தான் மீண்டும் வருவேன் என கூறுவது போலவும் உண்மையில் உடலின் உள்பகுதி வறண்டு போனதால்  எழுந்து வரமுடியாதது போல் உள்ளது. இந்த மர்மம் குறித்து டாக்குமெண்ட்ரி படமும் எடுக்கபட்டு உள்ளது.

ஆனால்  மியூசிய பொறுப்பாளர் டேரியா பயம்பினோ வித்தியாசமான கருத்தை கொண்டிருக்கிறார். எனினும் அவருக்கு ஆவி உலக நம்பிக்கை இல்லை.அவர் 2 வயது சிறுமியின் மம்மி கண்ணை  திறப்பது ஆப்டிகல் மாயை என கூறுகிறார்.


No comments:

Post a Comment